2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வாழைத்தோட்டத்துக்குள் பதுங்கியிருந்து கூட்டமைப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் மீது இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், நீர்வேலி, கரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 26) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அக்கூட்டம் முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் மீது, வாழைத் தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த இனந்தெரியாத நபர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .