2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: டக்ளஸ்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு, கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சுன்னாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்.

உங்களது சொந்த இடங்களில் நீங்கள் மீளக்குடியமர வேண்டும் என்பதில் எவ்வளவு விருப்பத்துடன் இருக்கின்றீர்களோ? அதேபோன்றுதான் உங்களை,  உங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற அக்கறை எனக்கும் உள்ளது. இதனடிப்படையில், கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த குறைந்த அரசியல் பலத்தைக் கொண்டும் அரசுடனான இணக்க அரசியலின் ஊடாகவும் குடாநாட்டில் படைத்தரப்பினர் வசமிருந்த 17 ஆயிரத்து 522 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்து அங்கு மக்களை மீளக்குடியேற்றியுள்ளோம்.

இருந்த போதிலும், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையே காணப்படுகின்றது. இதேவகையில் தான், இங்குள்ள இரு நலன்புரி முகாம்களைச் சேர்ந்த மக்களும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை இருந்து வருகின்றது. மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .