2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் விசாரணை

George   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தேர்தல் விதிமுறையை மீறி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சார்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஊழியர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (11) சாவற்கட்டு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில், பொதுமக்கள் கேள்வி கேட்க முனைந்த போது, அதற்கு விஜயகலா மகேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமையால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. விஜயகலா மகேஸ்வரனுடன் நின்றிருந்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஒருவர், நீங்கள் கேள்வி கேட்கமுடியாது, அதிகாரமாக கதைக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்த அப்பகுதி இளைஞர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். அங்கு மானிப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அங்கு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் தொலைபேசி மூலம் தெரிவத்தாட்சி அலுவலுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் முறைகேடுகள் தொடர்பான அதிகாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாட்சிகர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .