2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி; சாரதி சரண்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் புதன்கிழமை (12) இரவு சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை மோதி அவர் பலியாகக் காரணமாகவிருந்த வான் ஒன்றின் சாரதி, இன்று வியாழக்கிழமை (13) பொலிஸில் சரணடைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில், அதேயிடத்தைச் சேர்ந்த விசாசித்தம்பி தெய்வநாதன் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்திருந்தார்.

உறவினர் ஒருவருடைய வீட்டில் குழாய்க் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, வீடு சென்றுகொண்டிருந்த இவரை வீதியால் சென்ற வாகனம் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்த இவரை, அவரது உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றும்போது உயிரிழந்தார்.

தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மோதிய வான் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .