Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுமார் இருபத்தைந்து வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் மாவிட்டபுரக் கந்தன் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் மானம்பூ வாழை வெட்டும் வைபவம் நாளை வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ளது
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து முருகப்பெருமான் அடியவர்களும் பரிவாரங்களும் புடைசூழ காங்கேசன்துறை வீதி வழியாக சுமார் நான்கு கிலோமீற்றர்; தூரம்; வரை ஊர்வலமாகச் சென்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் மானம்பூ வாழை வெட்டவுள்ளார்.
கடந்த வருடம் வலி. வடக்குப் பகுதியிலுள்ள மாவிட்டபுரம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டமை, சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து மாவிட்டபுரக் கந்தன் ஊர்வலமாகச் சென்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் மானம்பூ வாழை வெட்டும் வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
15 Nov 2025