2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

குடிதண்ணீர் விநியோகத்துக்கு ஜப்பான் அரசு 280 மில்லியன் ரூபா நன்கொடை

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altகிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்வதற்கென ஜப்பான் அரசு 280 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளதாக வடக்கு மாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எந்திரி தி. பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை மற்றும் ஆலோசனையின் பேரில் ஜப்பான் அரசு மேற்படி நிதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுக்கு வழங்கிய முன்மொழிவை அடுத்தே இத்திட்டம் அங்கிகரிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரணைமடு மூலமான நீர் விநியோகத்துக்கு உள்ளடக்கப்படாத கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--