2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘3.5 ஏக்கர் காணியை விடுவிக்கவும்’

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள கரைச்சி பிரதேச சபைக்குரிய 3.5 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்குமாறு, கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இது குறித்து, அவர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அக்கடிதத்தில், கரைச்சி பிரதேச சபையில், 23.02.2018ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது சபை அமர்வில், கரைச்சி பிரதேச சபையின் பொது நூலகம் பற்றி விவாதம் நடைபெற்றதாகவும் அந்த 3.5 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதென்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய, கரைச்சி பிரதேச சபையால் 14.05.2018ஆம் ஆண்டு, 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கும் அந்தக் காலத்தில், ஆட்சியில் இருந்த வடக்கு மாகாண ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் குறித்த நூலகக் காணி விடுவிப்புத் தொடர்பாகக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், ஆனால் சாதகமான பதில் இதுவரை கிடைக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளார்.  

 2009ஆம் ஆண்டு, மீளக்குடியமர்வுக்குப் பின்னர், கரைச்சி பிரதேச சபைக்குரிய பொதுநூலக வளாகம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளபடியால், இந்தக் காணியை விடுவித்து, கிளிநொச்சிக்கான பொது நூலகத்தை நிர்மாணிப்பதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அ.வேழமாலிகிதன், ஆனாலும் காணி விடுவிக்கப்படாததால் அபிவிருத்தி முயற்சிகள் ஸ்தம்பித்துள்ளனவெனவும் கூறியுள்ளார்.  

 இந்நிலையில், தற்போதைய புதிய அரசாங்கம், இந்தப் பொது நூலகத்தை நிர்மாணிப்பதற்காக வழிவகையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .