Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். குடா நாட்டில் இடம்பெற்ற வாக்காளர் மீளாய்வின் போது தமது பதிவுகளை மேற்கொள்ளத் தவறியவர்களை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வரை யாழ் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் திணைக்கள அலுவகத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "இந்த வருடத்திற்கான வாக்களர் இடாப்பு மீளாய்வு பணிகள் ஜுலை 31ஆம் திகதியுடன் முடிவடைந்தன.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மீளாய்வின் போது தமது பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்கள் அதற்கான சரியான காரணங்களை தெரிவித்து பதிவுகளை மேற்கொள்ளாம் இதற்காக கிராம சேவையாளர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை" எனவும் தெரிவித்தார்.
49 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago
22 Dec 2025