2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

4 வீடுகளில் 10 இலட்சம் ரூபா திருட்டு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்.மருதங்கேணி வடக்குப் பகுதியிலுள்ள 4 வீடுகளில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

மருதங்கேணி வடக்குப் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள 4 வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரம் 10 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியிலுள்ள மேலும் 6 வீடுகளில் திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் ஆனால் இவ்வீடுகளில் எந்தபொருட்களும் திருடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டுள்ளமை  தொடர்பாக திங்கட்கிழமை காலையே வீட்டு உரிமையாளர்கள் அறிந்துகொண்டுள்ளனர். இதனைத் தொடர்;ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--