2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் 4,26,703 பேர் வாக்களிக்க தகுதி

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 26,703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ்.மாவட்டத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் எதிர்வரும் 1 ஆம் திகதி 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X