2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நல்லூரில் 65 பவுண் தங்க நகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம், கச்சேரி நல்லூர் பகுதியிலுள்ள  வீடொன்றில் கூரையைப் பிரித்து உள்நுழைந்த 5 பேர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர் குழு, அங்கிருந்த துணிகளை எடுத்து தமது முகங்களை மூடியவாறு வீட்டிலிருந்த மூவரையும் கத்தி முனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள் முதல்  அலுமாரிக்குள்ளிருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

வேலுப்பிள்ளை வேதநாயகம் (வயது 70) என்பவரது வீட்டிற்கு சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62;) அவரது மகள் வேதநாயகம் அர்ச்சனா (வயது 21) ஆகியோரை  கத்தி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் யாழ். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X