2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 7076.47 மில்லியன் ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மூன்று வருடங்களில்  7076.47 மில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்திற்குப் பிந்திய 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மாவட்டத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக  சமூர்த்தி, வாழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டம், கமநெகும, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வடக்கு கிழக்கு சமுதாய மீள் அமைப்புத் திட்டம்,  வடக்கின் வசந்தம் தீவக அபிவிருத்தி திட்டம்,  வடக்கின் துரித மீள் எழுச்சித்திட்டம், உள்ளூர் சேவை மேம்பாட்டுத்திட்டம், முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கான துரித அபிவிருத்தி திட்டம், மீள் எழுச்சித்திட்டம்,  மகிந்த சிந்தனையின் கீழ் ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி திட்டம், உலக உணவுத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X