2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழில் 84 வீதமான மக்களுக்கு மின்சார வசதி: அரச அதிபர்

Kogilavani   / 2013 ஜூலை 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா
, சுமித்தி தங்கராசா

'யாழ்.மாவட்டத்தில் தற்போது 84 வீதமான மக்கள் மின்சார வசதியை பெற்றுகொண்டுள்ளனர். ஏனையவர்களும் இந்த ஆண்டுக்குள் மின்சாரத்தை நூறு விதமும் பெற்றுகொடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்;கொள்ளப்பட்டு வருகின்றன' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

'யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ்.மாவட்டத்தின் நிலமை, அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.

'அபிவிருத்திப் பணிகளை அறிக்கையிடல்' தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.

இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'தெற்கிற்கும்; வடக்கிற்கும்; இடையே போக்குவரத்து பாதையை சீர் செய்ததன் மூலம் யாழ்.மாவட்ட விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் அதிக நன்மை அடைந்துள்ளார்கள்.

குறிப்பாக கடந்த காலத்தில் பின்தங்கி இருந்த விவசாய உற்பத்திகள் அதிகரித்துள்ளதுடன் மீன்பிடி உற்பத்தியும் அதிகரித்துள்ளன.

வடக்கிற்கும்; தெற்கிற்கும்; இடையே சிறந்த போக்குவரத்து வீதி அமைக்கப்பட்டதன் மூலம் தென்னிலங்கையில் இருந்தும் அதேபோன்று வடக்கில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் அதிகரித்தள்ளன.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் அனைத்தம் மக்களுக்காக செய்யப்படுகின்றன. இது மக்களை உரியமுறையில் சென்றமைவதுடன் அதனை மக்களும் அறிந்திருக்கு வேணடும்.

இதற்கான நடவடிக்கைகளை ஊடகங்கள் நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றன.

இதனை மக்கள் அறிவதுடன் மாவட்டம், மாகாணம், தேசியம், சர்வதேசம் என அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
இதனை வெளிப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும்.

கடந்த காலங்களைவ விட தற்போது பெருமளவிலான அபிவிருத்தியை நாம் அடைந்துள்ளோம்.

இலங்கையில உள்;ள ஏனைய மாவட்டங்களை விட  யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியின் அளவை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--