2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

9 வியாபார நிலையங்களில் கொள்ளை

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு தெற்கு வீதியில் அமைந்துள்ள 9 வியாபார நிலையங்கள் புதன்கிழமை (9) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் புடைவைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

வழமைப்போன்று மேற்படி வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள்   வியாழக்கிழமை(9) தங்கள் வியாபார நிலையங்களை திறப்பதற்காக வந்த வேளையில் வியாபார நிலையங்களின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் புடைவைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இது தொடர்பாக வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற யாழ்.குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X