Super User / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடத்திய பதிவாளர்களைத் தரம் I இற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சையில் யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து தோற்றியவர்களில் 3 பேர் பெறுபேறுகளின் அடிப்படையில் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தவகையில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதிவாளராகக் கடமையாற்றிய சு.ஸ்ரீமோகனன் தரம் ஒன்றுக்குத் தரம் உயர்த்தப்பட்டு யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்துக்கும், யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் பணியாற்றிய சு.சுரேந்திரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்துக்கும், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடமையாற்றிய செல்வி க. மீரா யாழ். மேல் நீதிமன்றத்துக்கும் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
15.10.2010 இல் இருந்து இவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிச்சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026