2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

அபாயகரமான ஆயதங்களுடன் இருவர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர்.

கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .