Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் செப்டெம்பர் 16ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரெழுச்சிக்கு. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவினை வழங்குவதென, செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் சங்க விசேட பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்த காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில், உடனடி விசாரணை நடாத்து, வடக்கு - கிழக்கு இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து ஆகிய கோசங்களை முன்னிறுத்தி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நிகழ்த்தப்படவுள்ளது.
இந்தக் கோரிக்கைகளில் முக்கியத்துவம் கருதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதெனத் தீர்மானித்துள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago