Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யாழ். கோட்டையை படையினர் நிலை கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (06) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“யாழ். மாவட்டத்தில், தற்போது பொதுமக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம்மாவட்டத்தின் சனத்தொகைக்கும், இன விகிதாரத்துக்கு ஏற்பவும் பொருளாதார ரீதியில் பெறுமதியற்றதான அரசாங்கத்துக்குரிய தரிசு நிலங்களுக்குள் நிலை கொள்ளத்தக்க ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும்.
“குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரது இருப்புகள் அமைந்துள்ள மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகைக்கும், இன விகிதாசாரத்துக்கும் ஏற்பவே அவை அமைந்திருக்க வேண்டும். மேற்படி படைகள் நிலைகொண்டிருக்கக்கூடிய காணி, நிலங்கள் கடற்றொழில், விவசாயச் செய்கைகள் போன்ற எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய வளங்களைக் கொண்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான காணி, நிலங்களாக இருக்கக்கூடாது.
“யாழ். கோட்டை என்பது, எமது பகுதியில் இருக்கக்கூடிய புராதன வரலாற்று அடையாளங்களுள் ஒன்றாகும். அந்த வகையில், கடந்த கால அசாதாரணச் சூழ்நிலைகளின்போது, பாரிய சேதங்களுக்கு உட்பட்டிருந்த மேற்படி கோட்டையையும், அதனது சுற்றுப் புறங்களையும் மீளப் புனரமைப்புச் செய்வதற்கு கடந்த காலங்களில் நாம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு, போதியளவில் அதனை நிறைவேற்றியும் வந்துள்ளோம்.
“மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் எஞ்சியிருக்கின்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பில், நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அவதானத்துக்கும் கொண்டு வந்து, தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“தற்போதைய சூழுலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருகின்ற ஓர் இடமாகவும் யாழ். கோட்டை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகையதொரு நிலையில், அதனை மீள படைகளின் தேவைகளுக்காக வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
31 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago