Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையின் ஏற்பாட்டில், சிறுவர், முதியோர் தின விழா, இன்று (01) முற்பகல் பாடசாலையின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி சி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியரும் சமூக சேவகருமான தேசகீர்த்தி ஞான திருக்கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவில், மாணவர்களின் சிறுவர், முதியோர் தொடர்பான பேச்சுக்கள், கவிதை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூத்தோர் சிலர் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், சிறப்புப் பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன், ஓய்வுநிலை அதிபர் இ.தேவராஜா, முன்னாள் ஆசிரியை திருமதி ஜெகதீஸ்வரி தேவராஜா, ஆசிரியை திருமதி தர்சினி பார்த்தீபன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இதில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குமாரசாமி மதுசூதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago