Editorial / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில், கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தத் தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி, இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஏற்கெனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா என்று, சந்தேகம் எழுந்துள்ளது.
2 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
26 Jan 2026