2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘புகையிலையைக் கைவிட்ட விவசாயிகள்’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய, மிளகாய், சாமை உள்ளிட்ட இதர பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனரெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .