Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புனர்வாழ்வு சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தான சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
ஜப்பான் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பிரிவில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிகிச்சை நிலையமானது, மத்திய சுகாதார அமைச்சால் திறந்து வைக்கப்பட்டு, தற்போது குறித்த சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு வடக்கின் பல பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலையில் பணியாற்றும் பணியாளர்கள் கடமை நேரத்தின்போது சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உள்ளதாகவும் அது தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
25 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago