Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்
வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு, ஒரே நாளில் இடமாற்றம் வழங்கப்பட்டமையானது, ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகவே காணப்படுவதாகத் தெரிவித்த பாதிக்கப்பட்ட தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், இது குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.
கடந்த மாதம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, சட்டத்தரணி ஒருவர், மணல் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் இதைத் தொடர்ந்தே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இடமாற்றத்தில், சேவைக் காலம் கருத்தில் கொள்ளப்படவில்லையெனத் தெரிவித்த அவர்கள், இது வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்ட ஓர் இடமாற்றமெனவும் குற்றஞ்சாட்டினர்.
இதனால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர், தமது வேலையைக் கைவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
10 minute ago
13 minute ago
17 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
17 minute ago
20 minute ago