Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த வருமானம் மேம்படுத்தப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 3,800 முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாண சபையின் 6 ஆயிரம் ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுடன் மட்டும் பணிபுரிந்து வருகின்றனரெனத் தெரிவித்தார்.
இதில், பலர் 2,500 ரூபாய் கொடுப்பனவுடனும் இருக்கிகன்றனரெனவும் பல ஆசிரியர்கள் இன்னமும் நிரந்தர நியமனம் இன்றியும் காணப்படுகின்றனரெனவும், அவர் கூறினார்.
இந்நிலையில், தேசிய முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்காதவர்களை இனங்கண்டு, அவர்களை சங்கத்துடன் இணைத்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான மேம்பாடுகளை மேற்கொள்வதோடு, குறைந்த ஊதியத்தைப் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர வருமான மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்படுமெனவும் கூறினார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் உள்ள கலைத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து, அவர்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் பயணிப்பதற்கான சிறந்த திட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படுமென, பவதாரணி மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
26 Jan 2026