2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் 10 உறுப்பினர்கள், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என 16பேர் கொண்ட குழுவினர், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான செயலமர்வொன்றுக்காக கேரளாவுக்குச் செல்லவுள்ளனர்.

ஏசியன் பவுண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வுக்கு, முதற்கட்டமாக 10 உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும், எஞ்சியவர்கள் சுழற்சி முறையில் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார்.

வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், எம்.அன்டனி ஜெயநாதன், சு.அரியரட்ணம், ஏ.எல்.வை.ஜவஹீர், வை.தவநாதன், இ.இந்திராஜா, ஞா.குணசீலன், ச.சுகிர்தன் ஆகிய 10 உறுப்பினர்களே, முதற்கட்டமாக கேரளாவுக்குச் செல்லவுள்ளனர். இவர்களுடன் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரும் பயணிக்கவுள்ளனர்.  

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற போதே, அவைத்தலைவர் சிவஞானம், மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X