2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘விரைவில் 77,000 பொருத்து வீட்டுக்கான பணிகள்’

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கில், 77,000 பேருக்கான பொருத்து வீடுகள் அமைக்கும் பணிகள், அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இருந்து மட்டும் 77,000 பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் பொருத்து வீடுகள் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் 6,000 பொருத்து வீடுகள் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, பொருத்து வீடுகள் தேவை என்று கோருவோருக்கு அவ்வீட்டை நாங்கள் அமைத்துக் கொடுப்போம். இங்குள்ள சிலர் பொருத்து வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள். இருப்பினும் வடக்கில் பொருத்து வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள், அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X