2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

108 இந்திய மீனவர்களுக்கு 28 ஆம் திகதிவரை விளக்கமறியல்

Super User   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, கர்ணன்)

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 108 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் திருமதி ஜோய் மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் இன்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் திருமதி ஜோய் மகாதேவனிடம் சமர்ப்பித்த மனுவொன்றையடுத்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 108 மீனவர்களும் அவர்களின் 18 படகுகளும் நேற்று வடமராட்சி மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் மேற்படி தமிழக மீனவர்களை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X