2021 மார்ச் 08, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு சிறைச்சாலையினை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அங்கு சிறைச்சாலையொன்று காணப்படுகின்ற நிலையிலேயே இந்த புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

சுமார் பத்தாயிரம் சிறைக்கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வகையிலேயே இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 28 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த சிறைச்சாலைக்காக இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக மேற்படி தகவல்கள் மேலும் கூறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .