2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இசுறு பாடசாலைகளை விரைவில் அபிவிருத்தி செய்ய அறிவுறுத்து

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

இசுறு பாடசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி வேலைகளைத் துரித கதியில் மேற்கொள்ளவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இசுறு பாடசாலைகளாக கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, வரணி மகா வித்தியாலயம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தா ஆகிய பாடசாலைகளே இசுறு பாடசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்வதற்கென அடிக்கல் நடப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான தொடர் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இத்திட்டப் பணிகளை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இசுறு பாடசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொன்றும் தலா 35 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--