2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பருத்தித்துறையில் பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதியுதவி

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறையில் 4 பாடசாலைகளுக்கு கல்வி அபிவிருத்திக்கென ஒரு லட்சத்தி 59 ஆயிரத்தி 800 ரூபா நிதியை தும்பளை சபா.ரவீந்திரன் அறக்கட்டளை நிதியம் வழங்கியுள்ளது.

சட்டத்தரணி சபா ரவீந்திரனின் மணிவிழா நிதியத்தின் 10ஆவது அண்டு நிறைவு மற்றும் சபா ரவீந்திரன் எழுதிய பராமரிப்புச் சட்டம் நூல் வெளியீடு ஆகியவற்றையொட்டி இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு 50 ஆயிரம் ரூபாவும், ஹாட்லிக் கல்லூரிக்கு 25 ஆயிரம் ரூபாவும், வேலாயுதம் மகா வித்தியாலயத்துக்கு 12 ஆயிரம் ரூபாவும் உரிய பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன், தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தில் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தொடர்ந்து இங்கு கற்றுவரும் மாணவி ஒருவருக்கு ஒரு வருடத்துக்கான புலமைப்பரிசில் நிதியாக 12 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

பராமரிப்புச் சட்ட நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்ற தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தில் வைத்தே இந்த நிதிகள் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, நூல் வெளியீட்டின் மூலம் கிடைத்த 60 ஆயிரத்தி 800 ரூபா அதே பாடசாலைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X