2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்கான முன்னோட்ட தகவல் பரிமாற்ற அமர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கொழும்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் 07ஆம் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி, யாழ்ப்பாணத்தில் தகவல் பரிமாற்ற அமர்வு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அமர்வில், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்துள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு.லெ.முருகபூபதி  கலந்துகொள்ளவுள்ளார்.  

இந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள படைப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பேராளர்களும் இந்த தகவல் பரிமாற்ற அரங்கில் கலந்துகொள்ள வருமாறு மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி வடமராட்சியிலுள்ள ஜீவநதி இதழின் வெளியீட்டகத்தில் சர்வதேச மாநாட்டுக்கான தகவல் பரிமாற்ற அமர்வு நடைபெறுமென்பதுடன், அந்த அமர்வில் வடமராட்சிப் பிரதேச எழுத்தாளர்களும் பேராளர்கள், படைப்பாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் நடைபெறவுள்ள அமர்வில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு.லெ.முருகபூபதி , எழுத்தாளர் தெணியான், விரிவுரையாளர் த.கலாமணி, ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--