2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினா வீரக்கோன், பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் கலந்து கொண்டனர்.

இன்று வலிகாமம் பகுதியில் உள்ள தெல்லிப்பளை உடுவில் பிரதேச செகயலகங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 153 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் உடுவில் பிரதேச செயலாளர் திருமதி சதிசன் மஞ்சுளாதேவி தலைமையில் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--