2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யாழ். மாவட்ட செயலாளருடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு

Super User   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், எஸ்.ரூபன்


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகை தந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் யாழ் நகரத்தின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன் மதியம் 1.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடடிவக்கைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேட்டறிந்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ் மாவட்டத்தில் கூடுதலான அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதை தாம் அவதானித்ததாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--