2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பொது இடத்தில் மது அருந்திய நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பொது இடத்தில் மது அருந்திய நால்வர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சுன்னாகம் மேற்கு பூதராயர் கோவிலடி பகுதியில் நேற்று நண்பகல்  மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்து இவர்கள் அவ்விடத்தில் வைத்து மது அருந்திக்கொண்டு இருந்த வேளையிலேயே பொலிசாரினால் கைது செயயப்பட்டுள்ளனர். இந்நிலையில் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள்  தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களை சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .