2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

யாழ்.தேசியக் கல்வியியற் கல்லூரியின் மாணவர் விடுதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.தேசியக் கல்வியியற் கல்லூரியின் மாணவர் விடுதி மற்றும் மலசலகூடங்களை புனரமைப்பதற்கு கல்வியமைச்சுடன் கலந்துரையாடி விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்' என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று தெரிவித்தார். 

தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த முத்தமிழ் விழாவில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியை பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலேயே நிறுவியிருந்தோம். இவ்விழாவானது தனியே ஒரு நிகழ்வாக இல்லாமல் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலான செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், இங்கு மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் மலசலகூடங்கள் புனரமைக்கப்படுவது முக்கியமானது அந்த வகையில் அதற்கான மதீப்பிட்டு அறிக்கையினை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் கல்வியமைச்சுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே எமது மாணவர் சமூகம் பாடசாலைக் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் மட்டுமல்லாது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

அந்தவகையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில் எமது பகுதிகள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் காணும்' என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .