2020 நவம்பர் 28, சனிக்கிழமை

யாழிற்கு தேர்தல் கண்காணிப்பு குழு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரையில் யாழிற்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
 
வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
 
கடந்த ஒருவார காலமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, இன்று மதியம் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
 
அதில், கட்சிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்நிலையில், கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள காலகட்டத்தில் தேர்தல் சூழ்நிலைகளை கண்காணிப்பதற்கு சார்க் அமைப்பு, ஆசிய தேர்தல் ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு ஆகியவை வருகை தரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--