2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தேர்தலை நோக்காகக்கொண்டே காணிகள் விடுவிப்பு : த.தே.கூ

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் வருகையினைக் கருத்தில்கொண்டுமே  இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின்  காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கில் வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமை கிடைக்கவேண்டும் இங்கு ஒரு மாகாண சபையை உருவாக்கி அவர்கள் இதனை ஆளவேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் தான் விரும்பி நடத்துவதற்கு முன்வரவில்லை மாறாக இந்தியாவின் பாரிய அழுத்தம்  மற்றும் அமெரிக்க போன்ற  நாடுகளின் அழுத்தங்களினாலேயே இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பபு பல்வேறு நாடுகளுடாக கொடுத்து வரும் அழுத்தமும் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்hமனம் போன்ற பல்வேறு காரணங்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த  தேர்தல் வரக்கூடிய கால கட்டத்தில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வருகையும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள சூழ்நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக தற்போது பொதுமக்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சர்வதேச ரீதியான காரணகளுக்காக காணிகள் விடப்படுகிறதே தவிர டக்ளஸ் தேவானந்தா கொடுத்த அழுத்தத்தினால் அல்ல. அவ்வாறு டக்ளஸ் தேவானந்தாவினால்  செய்ய முடியும் என்றால் வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க ஏன் அவரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான அழுத்தங்கள்  கொடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த காணிகள் விடுவிக்கப்படுகின்றதே தவிர டக்ளஸ் அழுத்தம் என்று சொல்வது தேர்தலை அடிப்டையாகக் கொண்டதேயாகும் என்றும் அவர் சொன்னார்.

யாழில், 13 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்று இராணுவத்தளபதி சொல்லியிருக்கிறார்.  ஆனால், வடக்கில் மட்டும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதனை எவரும் இதுவரை மறுதலிக்கவில்லை. வடக்கில் 10 லட்சம் மக்கள் வாழும் பிரதேசத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம்  இராணுவம் தேவையா?  இராணுவம் மட்டுமல்ல கடற்படை,விமாப்படையென்று  பல்வேறு பிரிவுகள் இருக்கிறது.  யாழில் 3 டிவிசன்  படையினர் இருக்கிறார்கள் ஒவ்வொரு டிவிசனிலும் 10 ஆயிரம்  படையினர் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிறேமச்சந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் வருகை தந்த போது யாழில்  இராணுவத்தினரை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் பெருமளவான இராணுவத்தினர் சிவில் உடையில் இருக்கிறார்கள்.

இங்கு நடைபெற்று வரும்  சகல நிகழ்வுகளில் இராணுவத்தின் பிரசன்னம் 100 வீதம்; இருக்கிறது. சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இராணுவத்திற்கு எந்தவிதமான அதிகாரம் இல்லை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு மட்டுமே இருக்கிறது இங்கு எல்லாமே தலைகீழாக நடைபெறுகின்றது.

யாழில்  11 கட்சிகள் 9 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடகின்றது . இதில் அரசாங்கத்திற்கு ஆதரவான பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன வடக்கில் ஜனநாயகம் இருக்கிறது என்று பொய்ப்பிரச்சாரம் காட்டுவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.

இங்கு 20 கட்சிகள் போட்யிடுவதென்பது ஜனநாயக் செயற்பாடு அல்ல ஜனநாயக விரோத செயற்பாட்டின் வெளிப்பாடேயாகும். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அதிகாரி கீhத்தி தென்னக்கோன் வடக்கு பகுதி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதுடன்  ஆசியாவிலேயே பெரும் தொகை இங்கேயே இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

தேர்தல்  ஜனநாயக் முறையில் நடைபெறவேண்டும் என்றால் இராணுவம் முகாம்களுக்குள் முடங்கவேண்டும் என்பதை கூட்டமைப்பு ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றது என்றார்.

பொது மக்களின் காணிகளை விடுவிக்கின்றோம் என்று சர்வதேச ஏமாற்றுவதற்கு செயற்படும் வேலைத்திட்டங்கள் இராணுவம் முற்று முழுதாக நிறுத்தி பொது மக்களின் காணிகளின் இருந்து  வெளியேறி மக்கள் மீள்குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் பலாலியை  விடச் செல்லவேண்டாம் என்று ஹத்துருசிங்க சொல்வது பொருத்தமற்றது என்று  அவர் தெரிவித்தார்.

  Comments - 0

 • Sumathy M Sunday, 04 August 2013 03:43 AM

  ஐயா சுரேஷ் அவர்களே!வலி வடக்கில் படைகள் உள்ள காணிகளை டக்ளஸால் ஏன் விடுவிக்க முடியவில்லை என்று கேட்கிறீர்கள்.
  1977ஆம் ஆண்டு முதற்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியினரை நம்பி நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்களே, இந்த அப்பாவி மக்களுக்கு நீங்கள் பெற்றுக்கொடுத்தது தான் என்ன ?அங்கே குடியேற்றம் இங்கே குடியேற்றம், இராணுவ பிரசன்னம் என்றெல்லாம் முழங்குகிறீர்கள்.

  இவற்றில் எதையாவது நிறுத்த முடிந்ததா ?இனப்பிரச்சினைக்கு ஏதாவது தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்ததா? வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் குழப்பியடித்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான் நீங்கள் .மக்களின் கஷ்டம் பற்றி பேசுகின்றீர்கள்,கஷ்டத்தை போக்க ஏதாவது செய்தீர்களா? நீங்கள் பெற்றுக் கொடுத்ததெல்லாம்..கண்ணீர்,கம்பலை, உயிரிழப்பு,பொருளிழப்பு. இனிமேலாவது நிம்மதியாக எமது மக்களை வாழ விடுங்கள்.

  Reply : 0       0

  kurumoorthy Sunday, 04 August 2013 04:15 PM

  ஐயா பிரேமச்ச‌ந்திரா! நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அதற்கு உங்கள் தம்பி சர்வேஸ்வரன் வேட்பாளரானால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

  தமிழ்த் தேசியத்திற்குள் குடும்ப அரசியலை முதல்முதலாக அறிமுகப்படுத்தியவர் நீங்கள்! பாவம் மக்கள் என்ன செய்வார்கள்? தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் வாக்களிக்கும்வரை உங்கள்பாடு கொண்டாட்டம்தான்!

  உங்கள் காட்டில் நல்ல மழை பொழிகிறது! குடும்பத்தோடு அந்த மழையில் நன்றாக நனையுங்கள்! அனுபவியுங்கள்! உங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடையாது! நல்ல தலைவர்கள் வரும்வரை தமிழ்த் தேசியத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு பொறுத்திருப்போம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--