Editorial / 2017 மே 23 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகததால் நடிகர்களான சூர்யா, சத்யராஜ் உட்பட 8 பேருக்கு, பிடியாணை பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டது.
2009ஆம் ஆண்டில், தமிழ் நாளிதழ் ஒன்றில், நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த செய்தி, நடிகைககள் குறித்து மிகவும் தரக்குறைவான தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது என, கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பின்னர் அந்தச் செய்திக்கு, அந்நாளிதழ் தரப்பில், வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்தி வெளியானதைக் கண்டித்து, நடிகர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தின் போது, ஊடகவியலாளர்கள் மீது, நடிகர்களான சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறி, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும், நடிகர்கள் யாரும் இதுவரை ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து, இன்று (23) இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், நீதிமன்றத்திலிருந்து பல முறை அழைப்பாணை அனுப்பியும், நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா உட்பட 8 பேர் மீதும், பிடியாணை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago