2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மகளிடமும் இரகசியம் காத்தார் கட்டப்பா

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற ரகசியத்தைத் தனது குடும்பத்தாரிடம் கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் சத்யராஜ்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும், கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர்.

அந்த கேள்விக்குக் கடந்த மாதம் வெளியான பாகுபலி 2 படத்தில் தான் பதில் கிடைத்தது.

இந்நிலையில் இது குறித்து சத்யராஜின் மகள் திவ்யா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

“எனக்கு 10 வயது இருக்கும்போதிலிருந்து அப்பா அவர் நடிக்கும் படங்களின் கதையை என்னிடம் கூறி வருகிறார்.

“பாகுபலி கதையை அப்பா ஒரு வரியில் சொன்னபோது பிடித்திருந்தது. ஆனால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அப்பா நீண்ட காலம் ஹைதராபாத்தில் இருக்க வேண்டும். அதனால் அவர் அந்த படத்தில் நடிக்க வேண்டுமா என்று நினைத்தேன். அப்பாவை பிரிந்து நீண்ட நாட்கள் இருந்தது இல்லை.

“கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று அப்பா எங்களிடம் கூறவில்லை. நாங்களும் கேட்கவில்லை. நானும், சிபியும் அப்பா முன்பு அமர்ந்து கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கணித்தாலும் அவர் சிரிப்பாரே தவிர எதுவும் சொல்ல மாட்டார்.

“அப்பாவும், நானும் பெஸ்ட் பிரெண்ட்ஸ். எங்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. அவர் என்னிடம் கூறாமல் இருந்த ஒரே ரகசியம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தான்.

“பாகுபலி 2 படம் பார்த்த பிறகே கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரிந்து கொண்டேன்” என்று திவ்யா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X