2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

2 ஆம் நூற்றாண்டு சிலைக்கு பிளாஸ்டிக் ஆணுருப்பு பொருத்தி சர்ச்சைக்குள்ளான பேர்லுஸ்கோனி

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலிய பிரதர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில்வியோ பேர்லுஸ்கோனி பிரதமர் அலுவலகத்திலிருந்து நேற்று புதன்கிழமை  தனது உடமைகளை அப்புறப்படுத்தினார்.

இத்தாலியின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பேர்லுஸ்கோனி (75) , கடந்த 17 வருடகாலத்தில் 10 வருடங்கள் பிரதமராக பதவி வகித்தார். இப்பதவிக்காலத்தில் தனக்கு கிடைத்த நூற்றுக்கணக்கான பரிசுப் பொருட்களில் இரு பொருட்களை மாத்திரம் அவர் தன்னுடன் எடுத்துச் செல்வதற்கு தீர்மானித்தாக இத்தாலிய பத்திரிகையான லா ரிபப்ளிகா தெரிவித்துள்ளது.

கஸகஸ்தானிலிருந்து அன்பளிப்புச் செய்யப்பட்ட கத்தியொன்று மற்றும் சீனாவிலிருந்து அன்பளிப்புச் செய்யப்பட்ட பூச்சாடி ஆகியனவே இவையாகும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், மறைந்த பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பர்  பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் தன்னுடன் எடுத்துச் செல்வதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ மாளிகையில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற,  வீனஸ்-  மார்ஸ்  சிலையை அவர் எடுத்துச்செல்லவில்லை.

2 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிலையில் சேதமடைந்த வீனஸின் கைகையும் ரோமனிய போர்க் கடவுளான 'மார்ஸின்' சேதமடைந்த கை மற்றும் ஆணுருப்பை மீளநிர்மாணித்து அழகுபார்த்தன் மூலம் கடந்த வருடம் பேர்லுஸ்கோனி சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கலையம்சம் கொண்ட இப்புராதன சிலையை புதிதாக மறுசீரமைப்பது காட்டு மிராண்டித்தனம் என அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்தன.  ஆனால் சிலையில் புதிதாக பொருத்தப்பட்ட ஆண்குறி அகற்றப்படக்கூடியது எனக்கூறி பேர்லுஸ்கோனியின் சிற்பி சர்ச்சையை தணிக்க முயன்றார்.
 


  Comments - 0

  • PUTTALAM HILMEE Wednesday, 30 November 2011 11:09 PM

    ஆணுக்கு ஆண் உறுப்பு இருந்தால் தானையா அழகு முட்டாள் பசங்க இது தெரியாமே ,,,,,,,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .