2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ரஷ்யாவின் கவர்ச்சி உளவாளிக்கு அதி உயர் விருது

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஷ்யாவின் மிகக் கவர்ச்சியான உளவாளியாக வர்ணிக்கப்படும் அனா சப்மனுக்கு அந்நாட்டு அரசாங்கம் உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.


28 வயதான அனா சப்மன்;, பிரித்தானியர் ஒருவரை திருமணம் செய்து பிரித்தானிய கடவுச்சீட்டு பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் ரஷ்ய உளவாளியாக பணியாற்றிய அவர், அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.


கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உளவாளிக் கைதிகள் பரிமாற்றத்தின்போது  ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்ட 10 உளவாளிகளில் இவரும் ஒருவர்.


நாடு திரும்பியபின் தனது ஏனைய சகாக்களைப் போல் அல்லாது, ஆண்களுக்கான பல சஞ்சிகைகளுக்கு உள்ளாடைகள் மாத்திரம் அணிந்தவாறு படுகவர்ச்சியாக போஸ்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அனா.


இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவமொன்றின்போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் அந்நாட்டு உளவுதுறையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.


  Comments - 0

  • nnassm Thursday, 21 October 2010 04:22 AM

    அட கஷ்டமே இப்படியுமா விருது வழங்குவது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--