Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சஞ்சிகையொன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தமைக்காக ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான டியன்னா ஆக்ரோன்.
24 வயதான டியன்னா அண்மையில் ஜி.கியூ எனும் சஞ்சிகைக்கு போஸ் கொடுத்திருந்தார். பிரபல புகைப்படக்கலைஞர்களில் ஒருவரான டெரி ரிச்சர்ட்ஸன் இப்புகைப்படங்களைப் பிடித்திருந்தார்.
ஆனால், இப்படங்கள் படுமோசமாக இருப்பதாக புகார்கள் வந்தன. பாடசாலை மாணவிகளின் ஆடையுடன் கவர்ச்சி போஸ்கொடுப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பலரிடமிருந்தும் கண்டனங்கள் வந்தன.
இந்நிலையில் தனது வலைப்பதிவில் இப்புகைப்படங்களுக்காக மன்னிப்பு கோருவதாக எழுதியுள்ளார் டியன்னா.
"அப்புகைப்படங்கள் எனது உண்மையான சுபாவத்தைப் பிரதிபலிக்கவில்லை. செக்ஸியான பாடசாலை மாணவியின் வேடத்தில் படம் எடுக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல, ஆனால் படப்பிடிப்பாளர் கேட்டபோது நான் மறுத்து வெளியேறவும் இல்லை. அப்புகைப்படங்கள் உங்கள் 8 வயது பிள்ளையின் கையில் அந்த சஞ்சிகை கிடைத்திருந்தால் நான் மீண்டும் வருந்துகிறேன்" என டியன்னா தெரிவித்துள்ளார்.
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
ki Friday, 29 October 2010 08:58 PM
நடிகை மன்னிப்பு கோரினாலும் அந்த பலத்தை காட்டாமல் ஊடகங்கள் விடாது போலும் !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025