2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ராஜீவுடனான திருமணத்தை பெற்றோர் விரும்பவில்லை: சோனியா காந்தி

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராஜீவ் காந்தியை தான் திருமணம் செய்ததை தனது பெற்றோர்கள் விரும்பவில்லை என இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகரின் மனைவி மரியா ஷ்ரீவருடன் 2006 ஆம் ஆண்டு கலந்துரையாடியபோது சோனியா காந்தி இதைத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு தான் பிரதமராக பதவியேற்காதமை தொடர்பான முழுக்கதையையும் என்றாவது தான் எழுதுவார் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மரியா ஷ்ரீவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றபோது அவர் சோனியா காந்தியை சந்தித்த வேளையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

1984 முதல் 1989 வரை இந்திய பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபட்டதை தான் விரும்பவில்லை எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை தான் அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசித்த போது எத்தகைய தீர்மானம் மேற்கொண்டாலும் தனக்கு ஆதரவு வழங்குவதாக தனது பிள்ளைகள் தெரிவித்தனர் என சோனியா காந்தி கூறியுள்ளர்.
 
 


  Comments - 0

 • xlntgson Sunday, 19 December 2010 09:38 PM

  அவர் முழுக்கதையையும் எழுதட்டும் அதன் பின் கருத்து சொல்லலாம்.
  உலகில் ஒருவரும் யோக்கியமில்லை என்னும் யூத கருத்தையே விகிலீக்ஸ் கொண்டிருக்கிறது.
  அதற்காக சின்னப்பொய், பெரிய பொய் என்றில்லாமலில்லை இஸ்ரேலின் பொய்களை தர்மத்தின் அடிப்படையில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால் உலகில் தர்ம நியாயமே இல்லை. ஆகவே அதன் அடிப்படையில் யாரும் எதையும் சரிகாண முயலவேண்டாம் என்பதே விகிலீக்ஸ் செய்தி.
  ஆனால் இப்போது '67-ம் ஆண்டில் இருந்த எல்லைக்கு போக நிர்பந்திக்க பிரேசில், அர்ஜென்டினா, லட்வியா, பொலிவியா போன்ற நாடுகளும் ரெடி!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--