2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அம்மாவாகப் போகிறார் ஐஸ்வர்யா: அமிதாப் பச்சன் அறிவிப்பு

Super User   / 2011 ஜூன் 21 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் முன்னிலை நடிகையும் முன்னாள் உலக அழகு ராணியுமான ஐஸ்வர்யா ராய் விரைவில் தாயாகப் போகிறார்.

ஐஸ்வர்யாவின் மாமனரான பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ட்விட்டர் இணையத்தளம் மூலம் அமிதாப் பச்சன் விடுத்த செய்தியில் 'நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா கர்ப்பிணியாகவுள்ளார். நான் மிக மகிழ்ச்சியாகவும் த்ரில்லாகவும் உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனின் புதல்வர் அபிஷேக் பச்சனை (35) ஐஸ்வர்யா ராய் (37) திருமணம் செய்தபின் ஐஸ்வர்யாவின் எடை அதிகரிக்கும் போதெல்லாம் அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் உலாவின. இப்போது உண்மையாகவே ஐஸ் அம்மாவாகப் போகிறார்.

பொலிவூட் பிரபலங்கள் பலர் ஐஸ்வர்யாவுக்கும் பச்சன் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது தயாரிக்கப்படும் 'ஹீரோயின்' எனும் ஹிந்தித் திரைப்படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா கர்ப்பமான செய்தியை சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே அமிதாப் அறிந்திருந்தார் எனவும் ஆனால்,  சர்வதேச இந்திய திரைப்பட விழா  ( IIFA) பரபரப்பு உச்சத்தை அடையும் வேளையில் இத்தகவலை வெளியிடுவதற்காக அவர் காத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

சர்வதேச இந்திய திரைப்பட விழா இவ்வார இறுதியில் கனடாவின் டொரன்டோ நகரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 23 June 2011 09:29 PM

  இரட்டை பெண்குழந்தைகள் என்று யூகிக்கப்பட்டதாம்- ஸ்கேன் செய்வது தடை என்பதால் இப்படி கூறுகின்றனரோ? எப்படியோ, யாருடைய சந்தோசமும் சந்தோசமே கிடைத்தால் இரட்டை உலக அழகிகள்?

  Reply : 0       0

  Nesan Wednesday, 22 June 2011 05:58 PM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .