2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்: கருத்து கணிப்பில் தகவல்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிவுட்டின் சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த கருத்து கணிப்பில் அவர் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிரபல வாராந்த பத்திரிகை ஒன்று சிறந்த பொலிவுட் பிரபலங்கள் யார் என்ற பெயரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அநேக நபர்கள் பொலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைத்தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் அமிதாப் தான் பொலிவுட்டின் சிறந்த நடிகர் என்று தேர்வாகி முதல் இடத்தை பிடித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமிதாப்புக்கு அடுத்தபடியாக பழம்பெரும் நடிகர் திலீம் குமார் இரண்டாவது இடத்தையும் ஷாரூக்கான் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்கள்தவிர ராஜ்கபூர் 5ஆம் இடமும், நர்கீஸ் 6ஆவது இடமும், தேவ் ஆனந்த் 7ஆவது இடமும், வகீதா ரஹ்மான் 8ஆவது இடமும், ராஜேஷ் கண்ணா 9ஆவது இடமும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சல்மான் 11ஆவது இடமும், அமீர் கான் 14ஆவது இடமும், தர்மேந்திரா 15ஆவது இடமும், ஹேமாமாலினி 18ஆவது இடமும், மதுபாலா 24ஆவது இடமும், கஜோல் 30ஆவது இடமும், ஹிருத்திக் ரோஷன் 32வது இடமும், ராணி முகர்ஜி 38ஆவது இடமும், கரீனா கபூர் 43வது இடமும், மும்தாஜ் 50ஆவது இடமும், சைப் அலிகான் 59ஆவது இடமும், பிரியங்கா சோப்ரா 86 இடமும், கத்ரீனா கைப் 93வது இடத்தையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--