2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சீனத் யுவதி குத்திக்கொலை: காதலன் தலைமறைவு

Editorial   / 2026 மார்ச் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவலைப் பகுதியிலுள்ள மாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் சீன நாட்டுத் யுவதி ஒருவர், அவரது காதலன் எனச் சந்தேகிக்கப்படும் நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டு யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும், தாக்குதலை நடத்திய சீன நாட்டு இளைஞர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த போது அங்கிருந்த மற்றொரு சீன நாட்டவர் ஒருவரின் கையில் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் சிகிச்சைக்காக களுபோவில (தென் கொழும்பு) போதனா வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஹுவலைப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .