2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அடுத்த வாரம் புதிய ஐபாட், சிறிய ஐபோன் ?

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 18 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள குப்பச்சினோ நகரத்தில் அமைந்துள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமையகமான அப்பிள் கம்பஸ்ஸில் இடம்பெறவுள்ள அடுத்த ஊடக நிகழ்வுக்கான அழைப்பிதழ்வுகளை அப்பிள் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வானது, எதிர்வரும் திங்கட்கிழமை (21) இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வழமை போன்று புதிரான தகவலுடன் தனது அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது. இம்முறை அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களில், “Let us loop you in.” என்ற வாசகம் காணப்படுகிறது.

மேற்படி நிகழ்வு தொடர்பாக பல வாரங்களாக வதந்திகள் உலாவிய நிலையில், அதில் நாங்கள் சிலவற்றை எதிர்பார்க்க முடியும். அதாவது, அப்பிள் ஆனது புதிய ஐபோனை வெளியிடப்போகின்றது. வெளியிடப்படவுள்ள இந்த ஐபோன் ஆனது ஐபோன் 5s கொண்டிருந்த திரையைப் போல நான்கு அங்குல திரையைக் கொண்டமையவுள்ளதுடன் இற்றைப்படுத்தப்பட்ட chipஐயும் கமெராவையும் கொண்டமையவுள்ளது.

எனினும் மேற்படி சிறப்புப் பதிவு ஐபோன் ஆனது ஐபோன் SE அல்லது வேறு எவ்வாறு அழைக்கப்படும் என்பது தெளிவில்லாமல் உள்ளது. எவ்வாறெனினும், ஐபோன் 6s, 6s Plus ஆகிவற்றிற்கான இற்றைப்படுத்தல்கள் மேற்படி நிகழ்வில் வெளிவராது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, இந்நிகழ்வில் முக்கியத்துவம் ஐபாட் எயார் பெறுகிறது. கடந்தாண்டு, ஐபாட் மினியை இற்றைப்படுத்திய அப்பிள், ஐபாட் ப்ரோவை வெளியிட்டது. இந்நிலையில், ஐபாட் எயார் பற்றி இதுவரை பெரிதாக தகவல்கள் வெளிவராத நிலையில், 9.7 அங்குலமான இந்த டப்லெட்டில் இற்றைப்படுத்தல்களை மேற்கொள்ள அப்பிளுக்கு மேலும் காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அப்பிள் பென்சிலுடன் இணைந்து இயங்கும் வகையிலும் keyboard cover உடன் இணைந்து இயங்கும் வகையில் smart connectorஐ கொண்டமைந்த புதிய ஐபோன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐபாட் எயார் 3 என்று கூறுவதைக் காட்டிலும், இது ஐபாட் ப்ரோவின் சிறிய வடிவம் எனலாம்.

அடுத்து, “Let us loop you in.” என்ற வாசகத்தின் மூலம் இந்நிகழ்வில் அப்பிள் Watch இன் தகவல்கள் இருக்கும் என எதிர்பார்த்தாலும், அப்பிள் Watch 2 வெளியீட்டுக்கு பதிலாக, புதிய அலங்கார நிறுவனங்களுடன் தனது இணைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழமையாக, அப்பிளின் நிகழ்வுகள், செவ்வாய்க்கிழமைகளிலேயே இடம்பெறும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22), அப்பிள், எஃப்.பி.ஐ மோதும் வழக்கு இடம்பெறவுள்ள நிலையிலேயே, இம்முறை மேற்படி நிகழ்வு திங்கட்கிழமை (21) இடம்பெறுகின்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X