2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.

நூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற  மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று  மீண்டும் ஏற்பட்டால்  அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.  

தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0

  • vijayaraja Alageson Wednesday, 22 December 2010 02:35 AM

    இரண்டாயிரத்து பன்னிரெண்டிலே தான் உலகம் முடியப்ப்போவதாக ஒரு வதந்தி இருக்கிறது..மாயன் கலண்டர்.
    குறிப்பின்படி சகல கிரகங்களும் சூரியன் உட்பட ஒரே
    நேர்கோட்டில் வருவதால் சமநிை சிதைந்து அதனால் ஒரு பெரும் அழிவு ஏட்படப்போவது உண்மை என பலரால் நம்பப்படுகிறது.பரிசுத்த பைபிள் பிரகாரம் மார்க் அத்தியாயம் படி உலக அழிவுக்கு முன்னர் நடக்கக்கூடிய சகுனங்கள் எல்லாம் சரியே.எல்லாம் அவன் செயல்.அந்த இறைவன் தான் காக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--