2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

S8இல் தலைப்பன்னி செருகும் பகுதி இல்லை?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைப்பன்னி செருகும் பகுதி இல்லாமல் சாதனங்கள் வருவது இந்த 2016ஆம் ஆண்டின் போக்கு என நீங்கள் கருதலாம். ஆனால், குறித்த போக்கானது அடுத்த வருடத்துக்கும் தொடரவுள்ளது.

தனது கலக்ஸி எஸ்6இல் அகற்றக்கூடிய மின்கலங்களை இல்லாமற் செய்த சம்சுங், கலக்ஸி எஸ்8இல் வழமையான 3.5 மில்லிமீற்றர் தலைப்பன்னி செலுத்தும் பகுதியை சம்சுங் அகற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தினால், ஏற்கெனவே நீங்கள் வைத்திருக்கின்ற தலைப்பன்னிகளை, புதிதாக வரவுள்ள திறன்பேசியில் பயன்படுத்த முடியாது. இல்லாவிடில், USB Type-C adapterஐ கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், கலக்ஸி எஸ்8 ஆனது USB Type-C portஐக் கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, குறித்த மாற்றங்களினால், கம்பித் தலைப்பன்னிகளை பாவிக்கும்போது கலக்ஸி எஸ்8க்கு மின்னேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைப்பன்னி செருகும் பகுதியை இல்லாமற் செய்வதன் மூலம் கலக்ஸி எஸ்8இனை மெல்லியதாக சம்சுங்கினால் தயாரிக்க முடியுமென்பதுடன், பெரிய மின்கலத்துக்கான இடமும் கிடைக்கின்றது. இதேவேளை, stereo ஒலிபெருக்கிகளை எஸ்8-இல் சம்சுங் உள்ளடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 7 இல், தலைப்பன்னி செருகும் பகுதியை அப்பிள் அகற்றியிருந்ததுடன், சில சீன நிறுவனங்களின் திறன்பேசிகளிலும் தலைப்பன்னி செருகும் பகுதி இதுவரையில் அகற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம், பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள மொபைல் வேர்ள்ட் காங்கிரஸில், கலக்ஸி எஸ்8ஐ சம்சுங் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--