Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குச் சொந்தமான உண்டியலை உடைக்க முற்பட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர் உட்பட மூவரை, இன்று திங்கட்கிழமை (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் நகரத்திலுள்ள தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தேவாலயத்தில் உண்டியல் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானித்த பிரதேசவாசியொருவர், அது தொடர்பில் முந்தல் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இத்தகவலயடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் அங்கிருந்த பெண் உட்பட மூவரை கைது செய்ததுடன், அவர்களின் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது அவ்விடத்தில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திவுலப்பிட்டி, படலாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் முன்னாள் விமானப்படை சிப்பாய் ஒருவர் அடங்குவதாகவும் தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago